Header Ads

  • BREAKING



    செபி விதிகளை மீறி சஹாரா குழுமம் ரூ.25,000 கோடி பணம் வசூலித்த விவகாரம்.


    சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய், வரும் ஜூன் 15ஆம் தேதிக்குள் ஆயிரத்தி 500 கோடியை செபியில் செலுத்தாவிட்டால், மீண்டும் சிறை செல்ல நேரிடும் என்று உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. செபியின் விதிகளை மீறி, பொதுமக்களிடம் இருந்து 25 ஆயிரம் கோடி ரூபாயை சஹாரா குழுமம் முதலீடாக பெற்ற விவகாரத்தில், 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம், அதன் தலைவர் சுப்ரதா ராய் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தாயாரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக பரோலில் சென்ற அவர், தொடர்ந்து பரோலை நீட்டித்து வருகிறார். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜூன் 15ஆம் தேதிக்குள், ஆயிரத்து 500 கோடி ரூபாய் செபியில் செலுத்தப்படும் என்று சுப்ரதா ராய் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. மேலும் 552 கோடி ரூபாய்க்கான காசோலையையும் ஜூன் 15ஆம் தேதியிட்டு, சஹாரா குழுமம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், உறுதியளித்தபடி பணத்தை செலுத்தவில்லை என்றாலோ செக் பவுன்ஸ் ஆகிவிட்டாலோ, மீண்டும் சிறை செல்ல நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தது. அதுவரை சஹாரா குழுமத்திற்கு சொந்தமான ஆம்பி வேலி நகரியத்தை ஏலம் விடுவதற்கான பணிகளை நிறுத்திவைக்குமாறு கூறிய உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜூன் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad