Header Ads

  • BREAKING



    வரும் 25-ம் தேதி தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம்: அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது.

    இக்கூட்டத்தில் விவசாயிகள் நலனை வலியுறுத்தி வரும் 25-ம் தேதி தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் வரும் 22-ம் தேதி அனைத்துக்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முழு அடைப்பு போராட்டத்திற்கு வணிகர்கள் மாணவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    இக்கூட்டத்தில் திருநாவுக்கரசர்திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், சுப.வீரபாண்டியன், தனபாலன், ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை. அதேநேரத்தில் பாஜக மற்றும் அதிமுக அணிகளுக்கு திமுக அழைப்பு அனுப்பவில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்ட திமுகவுக்கு தகுதி இல்லை எனக் கூறியிருந்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad