Header Ads

  • BREAKING



    ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் மழை, நாகையில் 2-ஆம் எண் புயல் கூண்டு.

    ஈரோடு, ராசிபுரம், சேலம், கம்பம், கொடைக்கானல், ஒக்கேனக்கல், நீலகிரி குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.

    ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூரில் பலத்த காற்றில் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு அடைந்தது. அதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    கடந்த சில நாட்களாக கடும் வெயிலால் அவதிப்பட்ட பொது மக்கள், மழை காரணமாக சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    விருதுநகர், சிவகாசி சுற்றுவட்டாரங்களில் லேசான மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் கொளுத்திய நிலையில் தற்போது மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நாகப்பட்டினம்: நாகை துறைமுக அலுவலகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டது.

    அந்தமான் அருகே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானதையடுத்து, நாகப்பட்டினத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது.

    இந்நிலையில், இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, மேலும் வலுப்பெற்று, புயலாக உருவாகியுள்ளது. மாருதா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல், மியான்மர் நோக்கி நகர்வதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வங்கக் கடல் பகுதியில் புயல் உருவாகியுள்ளதை குறிக்கும் வகையில் நாகை துறைமுக அலுவலகத்தில் 2 ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad