Header Ads

  • BREAKING



    பாகுபலி 2 திரைப்படத்திற்கு எதிரான போராட்டத்தை வாபஸ் பெற்றன கன்னட அமைப்புகள்.


    நடிகர் சத்யராஜ் வருத்தம் தெரிவித்ததை அடுத்து, பாகுபலி 2 திரைப்படத்திற்கு எதிரான போராட்டத்தை கன்னட அமைப்புகள் வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளன. 9 ஆண்டுகளுக்கு முன் காவிரிப்பிரச்சனையில் கன்னடர்களை இழிவாகப் பேசியதாகக் கூறி, அவர் நடித்த பாகுபலி 2-ம் பாகம் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்க மாட்டோம் என கன்னட அமைப்புக்கள் போராட்டம் நடத்தின. வரும் 28-ம் தேதி முழு அடைப்புப் போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்திருந்தன. இதையடுத்து தமது பேச்சுக்கு கன்னட மக்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக நடிகர் சத்யராஜ் நேற்று அறிவித்தார் இந்நிலையில், சத்யராஜ் தெரிவித்த வருத்தத்தை ஏற்று கன்னட அமைப்புக்கள் போராட்டத்தைக் கைவிடுவதாக வட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளான். இனி, கன்னடர்களைப் பற்றிப் பேசும் போது கவனத்துடன் வார்த்தைகளை பிரயோகிக்குமாறுமாறு சத்யராஜை எச்சரித்துள்ளாதாக தெரிவித்துள்ளான்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad