Header Ads

  • BREAKING



    பிரான்சில் அதிபர் தேர்தல்: புதுச்சேரியில் 2 மையங்களில் வாக்களிக்க ஏற்பாடு.


    பிரான்ஸ் நாட்டு அதிபர் தேர்தலையொட்டி புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வாக்குபதிவு மையங்களில் ஏராளமானோர், காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
    பிரான்ஸ் நாட்டு அதிபர் தேர்தலில் பிராங்கோயிஸ் பைலான், பெனாய்ட் ஹாமன் உள்ளிட்ட 11 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதற்கான முதல் சுற்று வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியுள்ள நிலையில், இத்தேர்தலில் இந்தியாவில் உள்ள பிரான்ஸ் குடியுரிமை பெற்ற மக்கள் வாக்களிக்கும் வகையில், புதுச்சேரி துணை தூதரகத்துக்குட்பட்ட பகுதிகளில் வாக்களிக்க 6 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் காலை முதலே ஏராளமானோர் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இரவு 7 மணிவரை நடைபெறவுள்ள இந்த தேர்தலில் 5 ஆயிரம் வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad