Header Ads

  • BREAKING



    2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஜுலை 15ந் தேதி தீர்ப்பு -நீதிபதி ஓ.பி.சைனி.



    கடந்த 2008ம் ஆண்டு 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு விதிகளை மீறி வழங்கியதால் நாட்டிற்கு ஒரு லட்சத்து 73 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த சி.பி.ஐ கடந்த 2011ம் ஆண்டு டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் விதிகளை மீறி 122 ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கப்பட்டதில் நாட்டிற்கு 30 ஆயிரத்து 984 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்திருந்தது. அத்துடன் அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க எம்.பி கனிமொழி, முன்னாள் தொலைத்தொடர்புத்துறை செயலாளர் சித்தார்த் பெகுரா, ஆ.ராசாவின் தனிச் செயலாளராக இருந்த ஆர்.கே.சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் சாஹித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா, யுனிடெக் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் நிறுவனத்தின் கவுதம் தோஷி, சுரேந்திர பிபாரா மற்றும் ஹரி நாயர் ஆகியோர் கூட்டுச் சதி, ஊழல், ஏமாற்றுதல், மோசடி, போலி ஆணவம் தயாரித்தல், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், லஞ்சம் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர். இவர்கள் தவிர யுனிடெக் வயர்லெஸ் நிறுவனத்தின் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து வழக்கு தொடர்பாக தொடர்புடைய ஒவ்வொருவரும் தங்களது எழுத்துப்பூர்வ வாதத்தை வரும் ஜுலை 5ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டுள்ளார். ஜுலை 11ந் தேதி 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
    இதே போன்று ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்புடைய சி.பி.ஐயின் மற்றொரு வழக்கு மற்றும் அமலாக்கத்துறையின் வழக்கிலும் ஜுலை 11ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஓ.பி.சைனி கூறியுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad