Header Ads

  • BREAKING



    3 ஆண்டுகளில் ரூ. 1.37 லட்சம் கோடி வரி ஏய்ப்பு.

    கடந்த 3 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 37 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    கடந்த 3 நிதி ஆண்டுகளில் 23 ஆயிரத்து 64 இடங்களில் நடந்த சோதனையில் இது தெரிய வந்ததாக வருவாய்த்துறை கூறியது. இதில், நேரடி மற்றும் மறைமுக வரி ஏய்ப்பில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் கண்டறிய பட்டு உள்ளதாகவும், அவை மூலம் 13 ஆயிரத்து 300 கோடி ரூபாய்க்கு பரிவர்த்தனை நடந்ததாக குறிப்பிட்டது. மேலும், 240க்கும் அதிகமாக பினாமி பரிவர்த்தனைகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறியது. இந்த விவகாரங்களில் இதுவரை மூவாயிரத்து 800க்கும் மேற்பட்டோர் கைது செய்ததாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad