Header Ads

  • BREAKING



    ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து வரும் எச்.டி.எஃப்.சி. வங்கி – 3 மாதங்களில் 6,100 ஊழியர்களை பணிநீக்கம்.


    இந்தியாவின் பிரபல தனியார் வங்கிகளில் ஒன்றான எச்.டி.எஃப்.சி., கடந்த 3 மாதங்களில் 6 ஆயிரத்து 100 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கெடுபிடி நடவடிக்கைகளால், விப்ரோ உள்ளிட்ட மென்பொருள் நிறுவனங்கள் தங்களது பணியாளர்கள் எண்ணிக்கையை வெகுவாக குறைத்து வருகின்றன. இந்நிலையில், இந்தியாவின் 2ஆவது மிகப்பெரிய தனியார் வங்கியான எச்.டி.எஃப்.சி.யும் தனது ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதத் தொடக்கத்தில் 90 ஆயிரத்து 400ஆக இருந்த எச்.டி.எஃப்.சி. வங்கி ஊழியர்களின் எண்ணிக்கை தற்போது 84 ஆயிரத்து 300ஆக குறைக்கப்பட்டுள்ளது. வங்கித்துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பம், ரோபோக்கள் பயன்பாடு போன்ற காரணங்களால் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கை மேலும் தொடரும் என்றும் எச்.டி.எஃப்.சி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad