Header Ads

  • BREAKING



    3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரூபாய் நோட்டுகளை மாற்றம் செய்ய மத்திய அரசு திட்டம்.

    புதிய ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பு அம்சங்களை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கறுப்புப் பணம் மற்றும் கள்ளநோட்டுகளை ஒழிக்க பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்ற மத்திய அரசு, புதிய 500 மற்றும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. உயர் பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டாலும், கடந்த 4 மாதங்களில், புதிய ரூபாய்களின் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதைத் தடுப்பது குறித்து, உள்துறை மற்றும் நிதித்துறை உயரதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது, புதிய ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பு அம்சங்களை 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad