Header Ads

  • BREAKING



    நியூயார்க்கை விட 3 மடங்கு பெரிய நகரத்தை நிர்மாணிக்கும் சீனா.

    நியூயார்க் நகரத்தைப் போல் 3 மடங்கு பெரிய நகரத்தை நிர்மாணிக்க இருப்பதாக சீனா அறிவித்துள்ளது. ஹெபேய் மாகாணத்தில் ஸியான்கன் என்ற பகுதியில் இந்த புதிய நகரத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது வரலாற்று சிறப்பு மிக்க தேர்வு என சீன கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் 100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் புதிய நகரத்தை அமைக்கவும், பின்னர் 200 முதல் 2 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் வரை விரிவுபடுத்தப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல், காற்று மாசு, மக்கள் தொகைப் பெருக்கம் ஆகியவற்றை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad