Header Ads

  • BREAKING



    விருதுநகர்: பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 ஆண் குழந்தைகள்.


    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 4 ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. ராஜபாளையம் கீழ ஆவரம்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி பதினெட்டாம்படியான். இவரது மனைவி பானுமதி பிரசவத்திற்காக, அருகிலுள்ள ஆண்டாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலையில், பானுமதிக்கு அறுவை சிகிச்சையின் மூலம் நான்கு அழகான ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. ஒவ்வொரு குழந்தையும் சுமார் இரண்டரை கிலோ எடையுடன் இருப்பதாகவும், தாயும் குழந்தைகளும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், பானுமதியின் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad