Header Ads

  • BREAKING



    4 எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம்.


    தமிழகத்தில் 4 எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு வெடிகுண்டு வைக்க மாவோயிஸ்டுகள் திட்டமிட்டுள்ளதாக சென்ட்ரல் ரயில் நிலைய மேலாளருக்கு மர்ம கடிதம் அனுப்பிய நபர் கைது செய்யப்பட்டார். சென்ட்ரல் ரயில் நிலைய மேலாளருக்கு வந்த கடிதத்தில், சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்லக்கூடிய நீலகிரி மற்றும் மங்களூரு விரைவு ரயில்களில், அரக்கோணம் அருகே, மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு வைத்து தகர்க்கத் திட்டமிட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், எழும்பூரில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக செல்லக்கூடிய தூத்துக்குடி மற்றும் நெல்லை விரைவு ரயில்களை மேல்மருவத்தூர் அருகே குண்டு வைத்து தகர்க்க திட்டமிட்டுள்ளதாக செல்போன் எண்களுடன், மாவோயிஸ்டு எச்சரிக்கை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நிலைய மேலாளர் அளித்த புகாரின் பேரில் செல்போன் எண்களுக்கு ரயில்வே போலீசார் தொடர்பு கொண்டு நடத்திய விசாரணையில் கடிதத்தை அனுப்பியது அரக்கோணத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் கங்காதரன் என தெரியவந்தது. தமது உறவினர்களை சிக்க வைக்க, இதே போன்று அவர்களது செல்போன் எண்களை குறிப்பிட்டு ஏற்கனவே 2011லும் எச்சரிக்கை கடிதம் அனுப்பியிருந்ததால் அவர், மனநோயாளியா எனும் ரீதியிலும், இதில் வேறு யாருக்கேனும் தொடர்புண்டா என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad