கட்டுகட்டாக சிக்கிய பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் போலீசாரின் வாகனச் சோதனையில் ஆயிரம் கோடி மதிப்பிலான பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் சிக்கியுள்ளன. ராஜ்கோட் சோதனைச்சாவடியில் வாகனத்தை மறித்து சோதனையிட்ட போலீசார், அதில் கட்டு கட்டாக பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் ஆயிரம் கோடி ரூபாய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அதனை கடத்தி வந்த மூன்று பேரை கைது செய்தனர். அவர்கள் பழைய ரூபாய் நோட்டுக்களை, புதிய ரூபாய் நோட்டுக்களாக மாற்ற பகவான் நகர் மாவட்டத்துக்கு எடுத்து சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கருத்துகள் இல்லை