Header Ads

  • BREAKING



    டி.டிவி தினகரனுக்கு நடிகர் சரத்குமார் ஆதரவு – ஒரே ஆண்டில் 6 முறை நிலைப்பாட்டை மாற்றிய சரத்குமார்.

    அ.தி.மு.க அம்மா அணியின் ஆர்.கே.நகர் வேட்பாளர் டி.டிவி தினகரனுக்கு நடிகர் சரத்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.
    சென்னை அடையாறில் தினகரனை சந்தித்து தனது சமத்துவ மக்கள் கட்சியின் ஆதரவை சரத்குமார் தெரிவித்தார். நடிகர் சரத்குமார் கடந்த ஒரு ஆண்டில் அரசியல் ரீதியாக எடுக்கும் 7வது முடிவு இதுவாகும். கடந்த ஆண்டு நெல்லையில் நடைபெற்ற ச.ம.க பொதுக்குழுவில் பேசிய சரத்குமார் தனித்து சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட இருப்பதாக கூறினார். அதன் பின்னர் பா.ஜ.கவின் மேலிடப் பிரதிநிதி பிரகாஷ் ஜவடேகர் சந்தித்த பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய இருப்பதாக சரத்குமார் தெரிவித்தார். ஆனால் ஜெயலலிதா அழைத்து திருச்செந்தூர் தொகுதியை வழங்கியதும், தனித்து போட்டி, பா.ஜ.க கூட்டணி என்கிற முடிவில் இருந்து பின்வாங்கி அ.தி.மு.க கூட்டணிக்கு சென்றார். பின்னர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற சசிகலாவை தனது மனைவி ராதிகாவுடன் சந்தித்து சரத்குமார் வாழ்த்து தெரிவித்தார்.
    இந்த நிலையில், சசிகலாவுக்கு எதிராக ஓ.பி.எஸ் குரல் கொடுத்த நிலையில், ஓ.பி.எஸ்சுக்கு வாழ்த்து தெரிவித்து சரத்குமார் அறிக்கை வெளியிட்டார். பின்னர் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ச.ம.க தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்து வேட்பாளர் பெயரையும் சரத்குமார் வெளியிட்ட நிலையில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் டி.டி.வி தினகரனை சந்தித்து சரத்குமார் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad