Header Ads

  • BREAKING



    இ-விசா பெற்றவர்கள் இனி இந்தியாவில் 60 நாட்கள் தங்கலாம்.

    இ-விசா எனப்படும் மின்னணு விசாக்கள் பெற்ற வெளிநாட்டு பயணிகள் இனி இந்தியாவில் 2 மாதங்கள் தங்கலாம் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். விசா கொள்கையில் தளர்த்தப்பட்ட சில உத்தரவுகள் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி இ-விசா பெற்ற வெளிநாட்டுப் பயணிகள் முன்பிருந்த ஒரு மாதம் என்ற காலக்கெடுவுக்கு பதிலாக 2 மாதங்கள் தங்கி இருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார். இதேபோல் சிகிச்சை பெறுவதற்காக இந்தியா வரும் பயணிகள் ஒரே விசாவில் காலக்கெடு முடிவதற்குள் மூன்று முறை நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவர் என்றும் இதன் மூலம் சுற்றுலாப்பயணிகள் இந்தியாவில் இருந்து அண்டை நாடுகளுக்கும் சுற்றுலா சென்று விட்டு மீண்டும் இந்தியாவுக்கு திரும்ப முடியும் என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad