Header Ads

  • BREAKING



    சாலையில் சிறார்களை வைத்து பிச்சை எடுப்பதை தடுக்க நீதிமன்றம் உத்தரவு – 76 சிறார்கள் மீட்பு


    சென்னையில் பிச்சை எடுத்த 76 சிறார்களை மீட்ட போலீசார் அவர்களை பிச்சை எடுக்க வைத்த 76 பேரை கைது செய்தனர்.குழந்தைகள் கடத்தலை தடுக்க, சிறுவர்களை வைத்து பிச்சையெடுப்போர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து. சென்னை மாநகர ஆணையர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவின் படி, சென்னை முழுதும் போலீசார் நடத்திய ஒரு நாள் நடத்திய சோதனையில் பிச்சை எடுத்துகொண்டிருந்த 76 சிறார்கள் மீட்கப்பட்டு காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை பிச்சை எடுக்க வைத்த 76 நபர்களை போலீசார் கைது செய்தனர். குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்கள் மீது இந்த நடவடிக்கை தொடரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad