Header Ads

  • சற்று முன்



    திருமணமான 8 நாட்களில் கணவனைக் கொலை செய்த பெண்.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருமணமான 8 நாட்களில் கணவனை கிரைண்டர் கல்லால் அடித்துக் கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள குட்டைத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். சிற்ப வேலை செய்து வந்த இவருக்கும் சான்றோர்பாளையத்தைச் சேர்ந்த விஜி என்பவருக்கும் கடந்த 8 நாட்களுக்கும் முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று மாலை விஜி அலறியடித்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்தார். அருகிலிருந்தோர் இதுகுறித்து விஜியிடம் கேட்டபோது, தனது கணவர் ரமேஷ் வீட்டினுள் ரத்தவெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதாகக் கூறி கதறி அழுதார். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் ரமேஷின் மர்ம மரணம் குறித்து விஜியிடம் விசாரணை நடத்தினர்.
    முதலில் தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய விஜி, போலீசாரின் தீவிர விசாரணைக்கு பிறகு தனது கணவர் அழகாக இல்லை என சிலர் கூறியதாகவும், இதையொட்டி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். கணவர் தாம்பத்ய உறவுக்கு அழைத்தபோது ஏற்பட்ட தகராறில், ஆத்திரத்தில் கிரைண்டர் கல்லால் கணவரை அடித்துக் கொலை செய்ததை விஜி ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து விஜியைக் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad