வருமான வரி சோதனையில் ரூ.89 கோடி ரூபாய் மதிப்பில் முறைகேடு.
எழும்பூரில் விடுதியில், எம்.எல்.ஏ. விடுதி அறையிலும் ஆர்.கே.நகர் வாக்காளர் பட்டியல், வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டதற்கான ஆவணங்கள் கிடைத்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினர். அதேபோல கடந்த இரு வாரங்களில் அமைச்சர் விஜயபாஸ்கர் மூலம் ரூ.89 கோடி பணம் கையாளப்பட்டதற்கான ஆவணங்களும் கிடைத்திருப்பதாக வருமான வரித்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் விசாரணை செய்து, அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை