Header Ads

  • BREAKING



    8 மாநில இடைத்தேர்தலில் பாஜக முன்னிலை, கர்நாடகாவில் காங்கிரஸ் முன்னிலை


    டெல்லி, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், அசாம், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், இமாச்சல பிரதேசம் ஆகிய 8 மாநிலங்களில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் நாடாளுமன்றத் தொகுதிக்கும் கடந்த 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஸ்ரீநகர் தேர்தலின்போது வன்முறை வெடித்து, குறைந்த வாக்குகளே பதிவானதால், 38 வாக்குப் பதிவு மையங்களில் மறுதேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், 8 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்ற 10 சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், பெரும்பாலான இடங்களில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் போரஞ்ச் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் 8 ஆயிரத்து 290 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார். அதேபோல், டெல்லி ரஜோரி கார்டன் தொகுதியை பாஜக கைப்பற்றும் நிலை உருவாகியுள்ளது. அங்கு பாஜக முன்னிலை வகிக்கும் நிலையில், காங்கிரஸ் 2ஆம் இடத்திலும், ஆம் ஆத்மி 3ஆவது இடத்திலும் இருக்கின்றன. அதேபோல், அசாம் மாநிலம் தேமாஜி ((Dhemaji)), மத்திப்பிரதேச மாநிலம் அடெர் மற்றும் பந்தவகர் உள்பட 5 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. இருப்பினும் கர்நாடகாவில் இடைத்தேர்தல் நடைபெற்ற 2 தொகுதிகளிலும் ஆளும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களே முன்னிலையில் உள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad