Header Ads

  • BREAKING



    9,334 கோடி கருப்புப் பணம், 60 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ்: வருமான வரித்துறை அதிரடி.


    கணக்கில் வராத 9 ஆயிரத்து 300 கோடி ரூபாய் பணம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டது தொடர்பாக 60 ஆயிரம் பேரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தவுள்ளனர்.

    ஆபரேசன் கிளீன் மணி என்ற திட்டத்தின் படி, உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்னர் வங்கிகளில் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் டெபாசிட் செய்த 18 லட்சம் பேரிடம் எஸ்.எம்.எஸ்., மின்னஞ்சல் வாயிலாக விளக்கம் கேட்கப்பட்டது. இந்த நிலையில், பிப்ரவரி மாதம் வரை 9 ஆயிரத்து 334 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத பணம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக 60 ஆயிரம் பேரிடம் அவர்கள் விசாரணை மேற்கொள்கின்றனர். இதில் ஆயிரத்து 300 பேர் மிக அதிக அளவில் கருப்புப் பணத்தை வைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் அவர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad