Header Ads

  • சற்று முன்



    மத்திய தரைக்கடல் பகுதியில் படகு கவிழ்ந்து 97 அகதிகள் பலி?


    மீட்கப்பட்ட அகதிகள்.

    லிபியாவையொட்டிய கடல் பகுதியில் அகதிகள் பயணம் செய்த படகு கவிழ்ந்ததில் 97 அகதிகள் பலியானதாக அஞ்சப்படுகிறது.

    இது தொடர்பாக லிபியா கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாவது: மத்தியதரைக் கடலில் படகு கவிழ்ந்ததாக வியாழக்கிழமை காலையில் கிடைத்த தகவலையடுத்து அங்கு கடற்படைப் படகுகள் விரைந்தன. கரையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் முற்றிலும் தகர்ந்த நிலையில் படகு மிதப்பதையும் அங்கு ஏராளமான அகதிகள் படகின் மரத்துண்டுகளைப் பற்றியபடி தத்தளிப்பதையும் கண்டனர். பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த 23 பேர் மீட்கப்பட்டனர். அவர்களிடமிருந்து பெற்ற தகவலிலிருந்து மேலும் 97 பேரைக் காணவில்லை என்று தெரிகிறது. அதில் 5 குழந்தைகள், 15 பெண்கள் அடங்குவர். அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றார் அவர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad