Header Ads

  • BREAKING



    அக்ஷய திரிதையை முன்னிட்டு சென்னை நகை கடைகளில் விற்பனை அமோகம்.



    அக்ஷய திரிதியை தினத்தில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை தற்போது நிலவி வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு அக்ஷய திரிதியை விற்பனையை நகைக்கடைகள் நேற்றே தொடங்கின. செய்கூலி, சேதாரம் போன்ற வழக்கமான கட்டணங்களில் சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளதால், தங்க நகைகள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அக்ஷய திரிதியை-யை முன்னிட்டு புதிய புதிய டிசைன்களில் நகைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. தியாகராய நகரில் உள்ள நகைக்கடைகளில் ஏராளமானோர், தங்கம் மற்றும் வைர நகைகளை தேர்வு செய்து வருகின்றனர்.
    பிற நாள்களை விட தங்கநகை விற்பனை அதிகமாக இருக்கும் என்பதால், தியாகராய நகரில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களும் அதிக அளவில் தியாகராய நகரில் திரண்டதால், சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad