Header Ads

  • BREAKING



    ஆசிய ஸ்குவாஷ் தொடரில் இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா சாம்பியன்.


    சென்னையில் 19வது ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனைகள் தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா மோதினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், நான்கு செட்டுகளில் 2 க்கு 2 என்று கைப்பற்றி போட்டி சமநிலை பெற்றது. வெற்றியை தீர்மானிக்கும் 5வது செட்டில், எழுச்சியடைந்த ஜோஷ்னா சின்னப்பா, ஆக்ரோஷமாக விளையாடி, 11க்கு 4 என்ற கணக்கில் வென்று, தீபிகா பல்லிகல்லை வீழ்த்தினார்.முன்னதாக நடைபெற்ற ஆண்கள் இறுதிப்போட்டியில், இந்திய வீரர் சவுரவ் கோஷல், ஹாங்காங் வீரர் மேக்ஸ் லீயிடம் தோல்வியடைந்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad