Header Ads

  • BREAKING



    பயணிகளை வைத்துக்கொண்டு, பஸ் ரேஸ் நடத்திய தனியார் பேருந்து ஓட்டுநர்கள்.



    திரைப்படங்களில் வருவதுபோன்ற பதைபதைக்க வைக்கும் இந்தக் காட்சிகள், கோவை – பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் அவ்வப்போது அரங்கேறும். கோவை – பொள்ளாச்சி நெடுஞாலையை தற்போது நான்கு வழி சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது செயல்பாட்டில் இருக்கும் நெடுஞ்சாலையின் இருமருங்கிலும் புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டிருக்கும் மணல் மற்றும் ஜல்லிகள் நிறைந்த சாலைதான் தனியார் பேருந்து ஓட்டுநர்களின் இலக்கு. இதில், பயணிகளை ஏற்றிக்கொண்டு, பாலைவனங்களில் நடைபெறுவதைப்போல் மணல் புழுதியை வாரி இறைத்துக்கொண்டு பறக்கின்றன தனியார் பேருந்துகள்.

    இவர்கள் தார்ச்சலை, மணற்சாலை என மாறி மாறி பயணிக்கும்போது, மற்ற வாகன ஓட்டிகள் உயிர் பயத்தில் அஞ்சி நடுங்கியவாறு செல்கின்றனர். அதேவேளையில், பேருந்துக்குள் இருக்கும் பயணிகள் சிலர் பேருந்து ஓட்டுநர்களை ஊக்கப்படுத்தி உற்சாகமளிப்பதாக கூறப்படுகிறது. பேராபத்து நிறைந்த இந்த பந்தய காட்சியை, இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் தனது உயிரை பணயம் வைத்து வீடியோ பதிவு செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில், ஐயப்பா மற்றும் SVT ஆகிய இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்கள் வைரமுத்து மற்றும் நாகராஜ் ஆகியோரை நான்கு பிரிவுகளின் கீழ் கைது செய்த போலீஸார், அவர்களது ஓட்டுநர்களின் உரிமங்களையும் ரத்து செய்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad