Header Ads

  • BREAKING



    பொறியியல் படிப்புக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


    2017-18 பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கு விண்ணக்க, ஆன்லைன் பதிவு நாளை தொடங்குகிறது. மாணவர்கள் தங்கள் தகவல்களை இணையதளத்தில் உள்ளீடு செய்து, யுசர் ஐடி, பாஸ்வேர்டு பெற வேண்டும். பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியானதும் மதிப்பெண் உள்ளிட்ட தகவல்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இம்மாதம் 31ம் தேதி வரை மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து ஜூன் 3ம் தேதிக்குள் தபால் மூலமோ நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும். பொறியியல் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் 27ம் தேதி தொடங்குகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad