Header Ads

  • BREAKING



    எச்1பி விசா கட்டுப்பாடுகளால் இந்தியர்களுக்கு நன்மையே : வல்லுநர்கள்.


    எச்1 பி விசாவுக்கு அமெரிக்கா விதிக்கும் புதிய கட்டுபாடுகளால் இந்திய ஐ.டி. ஊழியர்களுக்கு நன்மையே என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் மக்களுக்கு அதிக பணிகளை வழங்குவதற்காகவும், திறனில்லாத வெளிநாட்டு பணியாளர்களுக்கு அனுமதி மறுக்கவும் முடிவு செய்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எச்1பி விசாவுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டார். இந்த கட்டுப்பாடுகளால் இந்திய ஐ.டி. ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்ட நிலையில், அதை வல்லுநர்கள் மறுத்துள்ளனர். ஐ.டி. உள்ளிட்ட துறைகளில் மிகவும் திறன்பெற்றவர்களுக்கு மட்டுமே எச்1பி விசா வழங்கவும், அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ஆண்டு ஒன்றுக்கு 1 லட்சம் டாலர் நிர்ணயம் செய்யவும் அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், திறமையுள்ள இந்தியர்கள் நன்மையே பெறுவார்கள் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் ஐ.டி. ஊழியர்கள் பெரும்பாலானோர் திறன்மிக்கவர்களே என்று விளக்கம் அளித்துள்ள அவர்கள், டிரம்ப் உத்தரவால் இந்திய ஐ.டி. ஊழியர்களுக்கான ஊதியம் அதிகரிக்கவே செய்யும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad