Header Ads

  • சற்று முன்



    அரசு மருத்துவமனைகளில் மே 3ஆம் தேதி முதல் அவசரமில்லாத அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்படும்-அரசு மருத்துவர்கள்.


    போராட்டத்தின் ஒருபகுதியாக, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் மே 3ஆம் தேதி முதல் அவசரமில்லாத அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்படும் என அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். மருத்துவ பட்ட மேற்படிப்பில், அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்யக் கோரி தமிழகம் முழுவதும்,அரசு மருத்துவர்கள் 11ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் செந்தில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad