Header Ads

  • BREAKING



    குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.


    குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கும் உடான் திட்டத்தை பிரதமர் மோடி சிம்லாவில் தொடங்கிவைத்தார். இரண்டாம் நிலை நகரங்களை வான்வழி போக்குவரத்தின் மூலம் இணைக்கும் இந்த திட்டத்தின் மூலம், மிகக்குறைந்த சேவை கொண்ட 12 விமான நிலையங்கள், பயன்படுத்தப்படாமல் உள்ள 31 விமான நிலையங்களை உள்ளடக்கி, 70 விமான நிலையங்களை இணைக்கும் வகையில், 128 வழித்தடங்களில் விமானங்கள் இயக்கப்பட உள்ளன. ஒரு மணி நேரம் பயண தூரம் அல்லது 500 கிலோ மீட்டர் தொலைவு வரையிலான விமான சேவைக்கு கட்டணமாக சுமார் 2 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்க ப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 2036 ரூபாய் கட்டணம் கொண்ட சிம்லாவில் இருந்து டெல்லி செல்லும் முதல் விமானத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad