Header Ads

  • BREAKING



    அமெரிக்கா-வடகொரியா பிரச்சனை குறித்து 3ம் நாடு தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தவும்- போப்.


    அமெரிக்கா-வடகொரியா பிரச்சனை குறித்து, மூன்றாம் நாடு தலையிட்டு சுமுக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார். நேற்று தடையை மீறி மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியதும், வடகொரியாவுக்கு சர்வதேச சமூகம் அழுத்தம் தராவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் எச்சரித்திருப்பதும் போர் ஏற்படும் என்ற பதற்றத்தை அதிகரித்துள்ளது. அமெரிக்கா-வடகொரியா இடையே ஏற்படும் போர் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது. இதனிடையே, இத்தாலி தலைநகர் ரோமில் இருந்து எகிப்து தலைநகர் கெய்ரோவிற்கு விமானத்தில் பயணித்தபோது, செய்தியாளர்களிடம் பேசிய போப், பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முன்வருமாறு உலக தலைவர்களுக்கு தாம் அழைப்பு விடுப்பதாகத் தெரிவித்தார். போரானது பிற நாடுகளுக்கும் பரவினால், மனிதநேயத்தின் சிறந்த பகுதியை இழக்க நேரிடும் என அவர் எச்சரித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad