Header Ads

  • BREAKING



    தாட் முனையங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் – அமெரிக்கா.


    தென் கொரியாவில் அமைக்கப்பட்டுள்ள தாட் எனப்படும் ஏவுகணை எதிர்ப்பு முனையங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. வடகொரியாவின் தொடர் அச்சுறுத்தலை அடுத்து, நடுவானிலேயே எதிரிகளின் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் தாட் எனப்படும் ஏவுகணை எதிர்ப்பு முனையங்களை தென்கொரியாவில் அமெரிக்கா நிறுவி வருகிறது. இதற்கு சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வட கொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இது மிகவும் அவசியம் என்று அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில், தாட் முனையங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என கூறியுள்ள பசிபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்க ராணுவ தளபதி ஹேரி ஹாரீஸ், சீனாவை அச்சுறுத்தவே தாட் முனையங்கள் அமைக்கப்படுவதாக கூறுவது அபத்தமானது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad