Header Ads

  • BREAKING



    தமிழகத்தை குறிவைத்து வரும் பாஜக தலைவர் அமித் ஷா.


    தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கட்சியைப் பலப்படுத்த பாஜக தலைவர் அமித் ஷா 15 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இதன் ஒருபகுதியாக அவர் வரும் மே 10ம் தேதி தமிழகத்திற்கு வருகிறார். மூன்று நாட்களுக்கு சென்னையில் தங்கி அவர் கட்சியை பலப்படுத்துவது குறித்து மாநில பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் மற்றும் திமுகவின் தற்போதைய நிலை ஆகியவற்றை பாஜகவுக்கு சாதகமாக பயன்படுத்த அமித் ஷா திட்டமிட்டுள்ளார். திருப்பூர் மற்றும் கோயமுத்தூருக்கும் செல்ல திட்டமிட்டுள்ள அமித் ஷா, அண்மையில் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ,கோவா மற்றும் டெல்லி நகராட்சித் தேர்தல்களில் பெற்ற மகத்தான வெற்றியை தமிழ்நாட்டிலும் பெறுவதற்கான அச்சாரமிட திட்டமிட்டுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad