Header Ads

  • BREAKING



    ஆசிய சாம்பியன் பேட்மிண்ட்ன் போட்டியில் சிந்து வெற்றி.


    ஆசிய சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடரில் பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். சீனாவில் உள்ள வுஹானில் நடைபெற்று வரும் அந்த போட்டியின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் பி.வி. சிந்து, ஜப்பான் வீராங்கனை அயா ஒஹோரியை எதிர்கொண்டார்.இதில் பி.வி. சிந்து 21-14, 21-15 என நேர்செட் கணக்கில் ஜப்பான் வீராங்கனையை எளிதில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற சிந்துவிற்கு 40 நிமிடங்கள் மட்டுமே தேவைப்பட்டது. இதே நேரத்தில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அஜய் ஜெயராம் சீன தைபே வீரரிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad