Header Ads

  • BREAKING



    பாகுபலி 2 திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி.



    உலகம் முழுவதும் பாகுபலி 2 திரைப்படம் வெளியிடப்பட்ட நிலையில், முழுப்படமும் இணையத்திலும் வெளியானதால், படக்குழுவினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
    இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பாகுபலி 2 திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. ஆனால் தமிழகத்தில் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் இடையிலான பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் தமிழகத்தில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. படத்தை வெளியிட விநியோகஸ்தர்கள் ஒத்துக் கொள்ளாத காரணத்தினால், தமிழகம் முழுவதும் பாகுபலி 2 படத்தின் காலை எட்டு மணி சிறப்புக் காட்சி சுமார் 650 திரையரங்குகளில் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தயாரிப்பாளர் – விநியோகஸ்தர் இடையே உடன்பாடு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் இன்று காலை பதினொரு மணி அளவில் பாகுபலி 2 திரைப்படம் தமிழகத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
    தமிழகத்தில் பாகுபலி 2 திரைப்படமே வெளியாகாத நிலையில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் பாகுபலி 2 திரைப்படம் சட்டவிரோதமாக வெளியிடப்பட்டுள்ளது. திரையரங்கில் ஓடும் போது கேமரா கொண்டு பதிவு செய்யப்பட்ட முழுப்படமும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் பதிவிறக்கத்திற்கு கிடைத்திருப்பதால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    இந்த நிலையில், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தயாரான பாகுபலி 2 திரைப்படம் இன்று நாடு முழுவதும் வெளியானது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாகுபலி 2 திரைப்படம் வெளியானதை அடுத்து, நடிகர் பிரபாஸ் கட்-அவுட்டுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்து, பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். அதேபோல், கேரள மாநிலம் திருவனந்தபுரம், குஜராத் மாநிலம் அகமதாபாத் ஆகிய பகுதிகளில் பாகுபலி 2 திரைப்படம் வெளியானதை அடுத்து, ஏராளமான ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுத்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad