Header Ads

  • BREAKING



    பெங்களூரில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் உடனே வெளியேற காவல் துறை அறிவுரை.


    காலாவதி கடந்த பிறகும் பெங்களூரில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் உடனடியாக வெளியேற வேண்டும் என காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
    வெளிநாடுகளைச் சேர்ந்த பலர் பெங்களூரில் தங்கியுள்ளனர். பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்வோர் தவிர பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தங்கியிருக்கிறார்கள்.
    இந்த நிலையில், அண்மைக் காலமாக பெங்களூரில் நடக்கும் குற்றச்செயல்கள் குறிப்பாக கஞ்சா போன்ற போதைப்பொருள் விற்பனையில் வெளிநாட்டினருக்குத் தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளது.
    இவர்களில் பெரும்பாலானோர் காலாவதியைக் கடந்த பிறகும் பெங்களூரில் தங்கியிருப்பவர்கள் என்பதை காவல் துறை கண்டுபிடித்துள்ளது.
    கால அவதியைக் கடந்த பிறகும் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் அடுத்த 15 நாள்களில் பெங்களூரிலிருந்து வெளியேற வேண்டும் என காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
    காலாவதியைக் கடந்தும் பெங்களூரில் தங்கியிருக்கும் காங்கோ நாட்டை சேர்ந்த 7 பேரை கண்டுபிடித்துள்ள காவல் துறை, வெளிநாட்டினர் மண்டல பதிவு அலுவலகத்தின் மூலம் இவர்களை சொந்த நாடுகளுக்கு வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.
    எஞ்சியிருக்கும் வெளிநாட்டினரையும் சொந்த நாடுகளுக்கு வெளியேற்ற காவல் துறை தீவிரம் காட்டிவருகிறது. இதற்காக வெளிநாட்டினர் மண்டல பதிவு அலுவலகத்தின் ஒத்துழைப்பை நாடியுள்ளது.
    பெங்களூரில் தங்கி படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் பெரும்பாலானோர் 30-35 வயதினராக உள்ளனர். இவர்கள் சேர்ந்து பயிலும் கல்லூரிகளில் வருகைப்பதிவையும் காவல் துறை ஆராய்ந்து வருகிறது.
    போதைப்பொருள் விற்பனை போன்ற குற்றச் செயல்களை தடுக்க இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad