Header Ads

  • BREAKING



    பா.ஜ.க தேர்தலில் ஹீரோவாகவும், செயல்பாட்டில் ஜீரோவாக உள்ளது-சிவசேனா.


    பா.ஜனதா அதன் செயல்பாட்டில் ‘ஜீரோ’ என்றும்,தேர்தலில் மட்டுமே ‘ஹீரோ’ என்றும் சிவசேனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அக்கட்சி பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில், ஒரு காலத்தில் அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்ற காங்கிரஸ் செயல்பாட்டில் ஒன்றுமில்லாமல் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.இப்போது அதே நிலையில் பாரதிய ஜனதாவும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாரதிய ஜனதாவின் வெற்றிக்கு காங்கிரசின் இயலாமையே காரணம் என்றும், இந்த நிலை விரைவில் மாறும் என்றும் கூறப்பட்டுள்ளது. பிரதமர் மோடியும், மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசும் ஒவ்வொரு நாளும் புது புது தந்திரங்களை ஆய்வு செய்வதாகவும், மக்கள் சலிப்படையும் போது, பா.ஜ.கவுக்கு தோல்வி நிச்சயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad