பத்திரப்பதிவு நிபந்தனை தளர்வுக்கு எதிர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.
வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய அனுமதியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படுவதற்கு எதிரான வழக்கில் 2016ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதிக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட மனைகளை மறுபத்திர பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் அனுமதி வழங்கியது. இந்த உத்தரவை எதிர்த்து யானை ராஜேந்திரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் விவசாய நிலமாக இருந்த 3 லட்சம் மனைகள் வீட்டு மனைகளாக மாறும் என குறிப்பிட்டுள்ளார். மேல்முறையீட்டு மனுவை திங்கட்கிழமை முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் யானை ராஜேந்திரன் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை