Header Ads

  • BREAKING



    கருப்பர்களான தென்னிந்தியர்களுடன் வட இந்தியர்களான தாங்கள் இணைந்து வாழவில்லையா – தருண் விஜய்.

    கறுப்பர்களான தென் இந்தியர்களுடன் வட இந்தியர்களான தாங்கள் இணைந்து வாழ்வதில்லையா என்று பாஜக முன்னாள் எம்.பி. தருண் விஜய் கூறியதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
    நொய்டாவில் நைஜீரியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக அல் ஜசீரா தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது, இந்தியர்களை இனவெறியர்கள் என்று கூறுவதில் நியாயமில்லை என்று தெரிவித்த அவர், தாங்கள் இனவெறியர்களாக இருந்தால், கருப்பர்களான தென்னிந்தியர்களுடன் எப்படி இணைந்து வாழ்வோம் என்று கேள்வி எழுப்பினார். தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் கறுப்பர்கள் நிறைந்துள்ளதாக கூறிய தருண் விஜய், தங்களை சுற்றி கருப்பர்கள் இருந்தாலும் அவர்களுடன் இணக்கமாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார். கருப்பர்களான தென்னிந்தியர்களுடன் இணைந்து வாழ்வதை மிக உயரிய நிலையாக கருதி கூறிய கருத்து கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியதால், தனது பேச்சுக்கு தருண் விஜய், மன்னிப்பு கோரியுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad