உள்நாட்டில் விமானத்தில் பயணிக்க பாஸ்போர்ட் அல்லது ஆதார் கட்டாயமாகிறது.
உள்நாட்டு விமானப் பயணத்திற்கு, ஆதார் அல்லது பாஸ்போர்ட்டை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிவசேனா கட்சியை சேர்ந்த எம்பி ரவீந்திர கெய்க்வாட் ஏர் இந்தியா விமான நிறுவன அதிகாரியை தாக்கிய புகாரில், விமானத்தில் பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் அவர் தமது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததை அடுத்து அந்த தடையை விமானப் போக்குவரத்து அமைச்சகம் நீக்கியது. இது போன்று குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் விமானங்களில் பயணிப்பதை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக, உள்நாட்டிற்குள் பயணம் செல்ல விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, பயணிகளின் அடையாளத்தை அறிவதற்காக ஆதார் அல்லது பாஸ்போர்ட் எண் அளிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்க விமானப் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளளது. இது தொடர்பாக வரைவு செயல்திட்டம் தயாரிக்கப்பட்டு பொதுமக்களின் கருத்துக்கள் கேட்கப்பட இருக்கிறது. ஜுன் அல்லது ஜுலை மாதம் முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை