Header Ads

  • BREAKING



    அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் டி.டி.வி.தினகரன் நீதிமன்றத்தில் ஆஜர்


    டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் அவருக்கு எதிரான அன்னியச் செலாவணி மோசடி வழக்கின் விசாரணையை சென்னை எழும்பூர் நீதிமன்றம் பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைத்துள்ளது.
    டி.டி.வி. தினகரன் மீது அமலாக்கத் துறை தொடர்ந்த அன்னியச் செலாவணி மோசடி வழக்கு சென்னை எழும்பூர் அல்லிக்குள வளாகத்தில் உள்ள பொருளாதாரக் குற்றவியல் நடுவர் மன்றம் 2ல் நீதிபதி மலர்மதி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் டி.டி.வி.தினகரன் இன்று ஆஜராக நீதிபதி மலர்மதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி டி.டி.வி. தினகரன் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருப்பதாகவும் இந்த நிலையியில் டி.டி.வி. தினகரனை ஆஜராக கீழ் நீதிமன்றம் உத்தரவிட முடியாது தினகரன் தரப்பு வழக்கறிஞர் தீனசீலன் வாதிட்டார். மேல்முறையீடு செய்யப்பட்டதாலேயே கீழ் நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது என எந்த விதியும் இல்லை என நீதிபதி மலர்மதி கூறினார்.
    இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளரிடம் புகார் அளிக்கப் போவதாக தீனசீலன் கூறினார். புகார் அளித்துக்கொள்ளுங்கள் என்று நீதிபதி தெரிவித்தார். இதனால் நீதிபதி மலர்மதிக்கும் தினகரன் வழக்கறிஞர் தீனசீலனுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏறபட்டது. இதனைத் தொடர்ந்து விசாரணையை நீதிபதி பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைத்தார்.


    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad