Header Ads

  • BREAKING



    விஜய் மல்லையாவுக்கு சொந்தமான ‘கிங்ஃபிஷர் வில்லா’ ஆடம்பர மாளிகை விற்பனை.

    விஜய் மல்லையாவுக்கு சொந்தமான கிங்ஃபிஷர் வில்லா ஆடம்பர மாளிகையை நடிகரும் தொழிலதிபருமான சச்சின் ஜோஷி என்பவர் வாங்கியுள்ளார். கோவாவின் கண்டோலிம் பகுதியில் அமைந்துள்ள கிங்ஃபிஷர் வில்லா என்ற ஆடம்பர மாளிகை, விஜய் மல்லையாவுக்கு சொந்தமானதாகும். எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளுக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன்பாக்கி வைத்துள்ளதால், கிங்ஃபிஷர் வில்லாவை வங்கிகள் ஏலத்தில் விட முயற்சி செய்தன. அடிப்படை விலை 85 கோடி ரூபாய் என நிர்ணயித்தும், அதன் பிறகு 81 கோடி ரூபாய் என விலையை குறைத்து நிர்ணயித்தும் கிங்ஃபிஷர் வில்லாவை யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. இதன் பிறகு 73 கோடி ரூபாய் என அடிப்படை விலையை குறைத்து மூன்றாவது முறையாக ஏலம்விடப்பட்டபோதும் எடுக்க ஆளில்லை. இந்நிலையில், பேரம் பேசி 73 கோடி ரூபாய்க்கு சற்று அதிகம் விலைபேசி கிங்ஃபிஷர் வில்லாவை எஸ்பிஐ தலைமையிலான வங்கிகள் குழு விற்பனை செய்துள்ளது. தெலுங்கு மற்றும் இந்தி திரைப்பட நடிகரும் தொழிலதிபருமான சச்சின்ஜோஷி கிங்ஃபிஷர் வில்லாவை வாங்கியுள்ளார். வைகிங் மீடியா என்ற தமது திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்திற்காக சச்சின் ஜோஷி கிங்ஃபிஷர் வில்லாவை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad