Header Ads

  • BREAKING



    ஜனஸ்ரீ தொலைக்காட்சியின் தலைமைச் செயல் அதிகாரி கைது.


    கர்நாடகாவில் தனியார் நிறுவனத்தை மிரட்டி பணம் பறித்த புகாரில் ஜனஸ்ரீ தொலைக்காட்சியின் தலைமைச் செயல் அதிகாரி கைது செய்யப்பட்டார். செய்தி தொலைக்காட்சியான ஜனஸ்ரீ-யில் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ள லக்ஷமி பிரசாத் என்பவர், இன்சாஸ் குழும மேலாண்மை இயக்குநர்களை தொடர்பு கொண்டு 15 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. பணம் கொடுக்கவில்லை என்றால் நிறுவனம் தொடர்பாக செய்தி ஒளிபரப்பப் போவதாகவும் மிரட்டியுள்ளார். இதையடுத்து கோரமங்கலா காவல்நிலையத்தில் புகார் அளித்து விட்டு, 10 கோடி ரூபாய் பணத்துடன் லக்ஷமி பிரசாத்தை, மேலாண்மை இயக்குநர்கள் சந்திக்கச் சென்றனர். பணத்தை கொடுத்த போது அங்கு மறைந்திருந்த போலீசார், பிரசாத்தை கைது செய்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad