Header Ads

  • BREAKING



    மனைகள் மறு பத்திரப்பதிவு நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பிற்கு கட்டுப்பட்டது-சென்னை உயர்நீதிமன்றம்.

    மனைகள் மறு பத்திரப்பதிவு, வழக்கின் இறுதி தீர்ப்பிற்கு கட்டுப்பட்டது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அங்கீகாரமில்லாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், அக்டோபர் 20ஆம் தேதிக்கு முன்பு ஏற்கெனவே வீட்டுமனைகளாக பதிவு செய்யப்பட்ட மனைகளை மறுபதிவு செய்து கொள்ள அனுமதியளித்து பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ஜி.ரமேஷ் தலைமையிலான அமர்வு அண்மையில் உத்தரவிட்டது. அந்த உத்தரவின் நகல் இன்று வெளியிடப்பட்டது. இதன்படி, 2016ஆம் ஆண்டு அக்டோபரில் வெளியிட்ட அரசாணைப்படி, வீட்டுமனைகளை மறுபதிவு செய்வது என்பது, விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவதற்கு தடை விதித்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஒருவேளை இறுதி தீர்ப்பில் மறு பதிவு செல்லாது என்று அறிவிக்கப்பட்டால் அனைத்து மறு பத்திரப்பதிவுகளும் செல்லாததாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad