Header Ads

  • BREAKING



    பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானிக்கு பா.ஜ.க. துணையாக இருக்கும் – அமித் ஷா


    பாபர் மசூதி இடிப்பு வழக்கில், எல்கே அத்வானிக்கு பா.ஜ.க. ஆதரவளிக்கும் என உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமாபாரதி ஆகியோரிடம் மீண்டும் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, வெங்கய்ய நாயுடு ஆகியோர் பிரதமரின் இல்லத்தில் ஆலோசனை நடத்தினர். பின்னர் எல்.கே.அத்வானியிடம் தொடர்பு கொண்டு பேசிய அமித் ஷா, பாஜக உங்களுடன் துணையாக இருக்கும் என்று உறுதியளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, உச்ச நீதிமன்றத்தில் உத்தரவை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்தும் விவாதித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல, மத்திய அமைச்சர் உமா பாரதியை நேரில் சந்தித்த அமித் ஷா, உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad