Header Ads

  • BREAKING



    மதுக்கடைகள் அகற்றம் எதிரொலி, போலீஸ் பாதுகாப்புடன் வரிசையில் மதுவாங்க காத்திருக்கும் குடிமகன்கள்.

    நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் பல மூடப்பட்டதால், கடைவீதிகளில் உள்ள மதுக்கடைகளில் குடிமகன்களின் கூட்டம் முண்டியடித்து வருகின்றது. குடிமகன்களுக்கு வந்த சோதனை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. இவர்கள் குடிதண்ணீருக்காகவோ… ரேசன் பொருட்களை வாங்கவோ.. ஏடிஎம் இல் பணம் எடுக்கவோ இப்படி கால்கடுக்க நீண்ட வரிசையில் நிற்பதாக நினைத்து விடாதீர்கள்..!
    ஏழைகள், பணக்காரர், இளைஞர்கள், முதியவர்.. என பேதமில்லாமல் போலீஸ் பாதுகாப்புடன் வரிசை கட்டி காத்திருப்பது மதுக்கடை வாசல் என்பது தான் வியப்புக்கு காரணம்…!
    குடிதண்ணீருக்காக வரிசைகட்டிய காலி குடங்களுடன் மொட்டை வெயிலில் பெண்கள் காத்திருக்கும் இதே ராமநாதபுரத்தில் தான் மதுபாட்டில் வாங்க வரிசைகட்டி நிற்கின்றது இந்த காளையர். சத்தமிலாமல் ஊருக்கு வெளியே சென்று குடித்து வந்த குடிமகன்களுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பால் புதிய சோதனை ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்தில் நெடுஞ்சாலையையொட்டி உள்ள 3321 மதுக்கடைகள் ஒரே நாளில் மூடப்பட்டதால் தான் மதுவுக்காக இப்படி முண்டியடிக்கிறது கூட்டம்.
    தர்மபுரியில் இரு புறமும் நூற்றுக்கணக்கானோர் நீண்ட வரிசையில் முண்டியடித்தபடி, எங்கே தங்களுக்கு மது பாட்டில் கிடைக்காமல் போய்விடுமோ என்ற நடுக்கத்தில் காத்திருந்து ஒன்றுக்கு இரண்டாக பாட்டில்களை வாங்கிச்செல்கின்றனர்.
    தூத்துக்குடியில் மட்டும் 84 மதுக்கடைகள் மூடப்பட்டதால் திறந்திருந்த கடைகளில் மதுவாங்க முண்டியடித்த காளையர் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை வரவழைக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.
    தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் குடிமகன்கள் தெரு தெருவாக அலைந்து கால்கடுக்க காத்து நின்றாலும்… உச்ச நீதிமன்ற உத்தரவை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.
    குடிமகன்களுக்கு சோதனை என்றாலும் மதுக்கடைகளை அகற்ற போராடியவர்களுக்கு நீதிமன்ற உத்தரவு ஒரு வரலாற்று சாதனை.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad