Header Ads

  • BREAKING



    வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் கொலையாளி சென்னையில் பதுங்கல்.

    தூத்துக்குடி அண்ணாநகர் 9-வது தெருவை சேர்ந்த முனியசாமி என்ற இளைஞரை கொடூரமாக கல்லால் தாக்கிய மர்ம நபர் அவரிடம் இருந்து செல்போனையும் சொற்ப அளவிலான பணத்தை எடுத்து சென்றுள்ளான் முகம் சிதைந்த நிலையில அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
    கடந்த 2-ந் தேதி ஜன நெருக்கடி மிகுந்த பழைய பஸ் நிலையத்தையொட்டி உள்ள எஸ்.ஏ.வி பள்ளிக்கூட மைதானத்தில் இருசக்கரவாகனத்தில் சென்ற ஆத்தூர் பா.ஜ.க பிரமுகர் காளிராஜ் என்பவரை தலையில் கல்லால் தாக்கி கொன்று விட்டு அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது .
    3-ந் தேதி சங்கரப்பேரி அருகே செல்போன் கடை ஊழியர் ராமசாமி என்பவரை கல்லால் அடித்துக் கொலை செய்து அவரிடம் இருந்தும் பணம் மற்றும் செல்போனை கொலையாளி பறித்து சென்றுள்ளான்.
    இந்த 3 சம்பவங்களையும் செய்த மர்ம நபர் குறித்து தகவல் கிடைக்காமல் காவல்துறையினர் குழம்பி வந்த நிலையில்
    முதலில் தாக்குதலுக்குள்ளான முனியசாமியின் செல்போன் மூலம் அந்த மர்ம கொலையாளி யார் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
    கடந்த 1ந்தேதி கொள்ளை மற்றும் தாக்குதல் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து காணாமல் போன முனியசாமியின் செல்போனை ஒருவர் பயன்படுத்திவருவதை கண்டறிந்த காவல்துறையினர் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த செல்போனை, தூத்துக்குடி மணிநகரை சேர்ந்த சுதந்திரராஜ் என்பவர் குறைந்த விலைக்கு விற்றது தெரியவந்தது.))
    அந்த சுதந்திரராஜ் வேறு யாருமல்ல, காவல்துறையினரால் தேடப்படும் பிரபல ரவுடி என்பதும் அவன் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில்
    மீண்டும் காவல்துறையினருக்கு சவால் விடும் வகையில் தொடர் கொலைகளை அரங்கேற்றி வருவதை கண்டுபிடித்தனர். பார்பதற்க்கு சிறுவன் போல இருக்கும் சுதந்திரராஜ் 25 வயதுடைய கொடூர கொலையாளி என்கிறது காவல்துறை.
    அவனது கூடாளிகள் மற்றும் உறவினர்களிடம் இருந்து அவன் தற்போது பயன்படுத்தி வரும் செல்போன் மூலம் அவன் சென்னையின் புற நகர் பகுதிகளில் வலம் வருவதை தூத்துக்குடி காவல்துறை உறுதி செய்துள்ளது. சுதந்திரராஜ் முகவும் ஆபத்தான கொலையாளி என்பதால் சென்னையின் புறநகர் பகுதியில் இரவு நேரத்தில் தனியாக வாகனத்தில் செல்வோர் மிகவும் எச்சரிக்கையாக பயணம் மேற்கொள்ளும் படி காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். அவனை தேடி தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்த்துள்ள 3 தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வரும் நிலையில், ரவுடி சுதந்திரராஜை பிடிக்க சென்னை பெருநகர காவல்துறையினரும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
    மேலும் முகவரி கேட்பது போல யாராவது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இரு சக்கரவாகனத்தை நிறுத்த முயன்றால் எக்காரணத்தை கொண்டும் வாகனத்தை நிறுத்த வேண்டாம் என்றும் சுதந்திர மூர்த்தியை பார்த்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களில் தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
    இரவு நேரத்தில் ஆபத்துக்கு பாவமில்லை என்று உதவச்செல்லும் முன் தகுந்த முன் எச்சரிக்கை வேண்டும் என்றும் இடம் பொருள் ஏவல் அறியாமல் வாகனத்தை நிறுத்தினால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கும் இந்த சம்பவங்களே சாட்சி.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad