பணப் பட்டுவாடாவில் விஜயபாஸ்கருக்கு பெரும் பங்கு இருப்பதாக தேர்தல் ஆணையம் புகார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா நடைபெற்றதில், அமைச்சர் விஜயபாஸ்கர் முக்கிய நபராக செயல்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 8ஆம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவருடைய கூட்டாளிகள் தொடர்புடைய 21 இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்து வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததில் அமைச்சர் விஜயபாஸ்கர் முக்கிய நபராக செயல்பட்டார் என்றும், சுமார் 89 கோடி ரூபாய் மதிப்புடைய பணம், கட்சித் தலைவர்கள் மூலம் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக விஜயபாஸ்கரின் கணக்காளர் ஸ்ரீநிவாசன் மூலம் ஆவணங்கள் சிக்கியதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து 5கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. கட்சித் தலைவர்கள் மூலம் 89 கோடி ரூபாய் விநியோகிக்கப்பட்டதற்கான ஆவணங்கள் விஜயபாஸ்கர் வீட்டிலும் எம்.எல்.ஏ. அறையிலும் கிடைத்ததாகவும், பணம் தரப்பட்ட வாக்காளர்களின் பட்டியல் சிக்கியதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. விநியோகிக்கப்பட்ட பணத்தில் இருந்து 31 லட்சத்து 91 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும்படையினர் 74 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை