Header Ads

  • BREAKING



    எம்.எல்.ஏ.க்களை விலை பேசிய நிதின் கட்கரிக்கு நன்றி கூறுங்கள் – மனோகர் பாரிக்கருக்கு திக் விஜய் சிங் பதிலடி.

    எம்.எல்.ஏ.க்களை விலை பேசி வாங்கியதற்காக நிதின் கட்கரியிடம் நன்றி தெரிவிக்குமாறு கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் பதிலடி கொடுத்துள்ளார். கோவாவில் அதிக இடங்களை வென்றிருந்த போதும், ஆட்சியமைக்க தவறியதற்காக திக் விஜய் சிங்குக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அம்மாநில முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறி இருந்தார். இதற்கு டிவிட்டர் வாயிலாக பதிலடி கொடுத்துள்ள திக் விஜய் சிங், பதவிக்காக அலைவது அவமானகரமானது என்று மனோகர் பாரிக்கரை சாடியுள்ளார். கோவா மக்களை பாரிக்கர் ஏமாற்றி விட்டதாகவும், இதற்காக மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் திக் விஜய் சிங் கூறியுள்ளார். யாருக்காவது நன்றி கூற வேண்டும் என்று விரும்பினால் ஹோட்டலில் வைத்து சுயேட்சை எம்.எல்.ஏ.க்களை விலை பேசிய நிதின் கட்கரிக்கு நன்றி தெரிவிக்குமாறு பாரிக்கரை அவர் கடுமையாக சாடியுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad