Header Ads

  • BREAKING



    அமானுஷ்ய சக்தி கிடைக்கும் என நம்பி தாய், தந்தை, தங்கை, அத்தையை கொன்ற கொடூரன்.


    அமானுஷ்ய சக்தி கிடைக்கும் என நம்பி, தன் குடும்பத்தையே துண்டு துண்டாக வெட்டிக் கொன்றுள்ளான் மருத்துவம் படித்த இளைஞன் ஒருவன். கேரளாவில் நிகழ்ந்த இந்த திடுக்கிடும் சம்பவம் குறித்த பின்னணியை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
    கன்னியாகுமரி மாவட்டம் அழகிய மண்டபத்தை சேர்ந்த ராஜதங்கம் என்பவர், மார்த்தாண்டத்தில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற அவர், மருத்துவரான மனைவி ஜீன் பத்மா, மகள் கரோலின், மகன் கேடல் ஜீன்சன் ராஜா ஆகியோருடன் திருவனந்தபுரத்தில் குடியேறினார்.
    மகளையும், மகனையும் ஆஸ்திரேலியாவில் மருத்துவம் படிக்க அனுப்பிவைத்தார் ராஜதங்கம். கரோலின் மருத்துவரான நிலையில், கேடல் ஜீன்சன் ராஜா படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு அங்கேயே கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அண்மையில், ஆஸ்திரேலியாவிற்குச் சென்ற ஜீன்பத்மா, மகனையும், மகளையும் அழைத்துக் கொண்டு திருவனந்தபுரத்திற்கு வந்தார். இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி ராஜதங்கம் வீட்டில் இருந்து கரும்புகை கிளம்பியதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அங்கு சென்றுள்ளனர். அப்போது, வீட்டு சுவர் ஏறிக்குதித்து கேடல் ஜீன்சன் ஓடுவதை கண்ட அவர்கள், ஏதோ அசம்பாவிதம் நடந்துள்ளது என்று எண்ணி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து பார்த்தபோது, வீட்டுக்குள் ராஜதங்கம், அவரது மனைவி ஜீன் பத்மா, மகள் கரோலின், பார்வையற்ற சகோதரி லலிதா ஆகிய நான்கு பேரும் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, எரிக்கப்பட்டு கிடந்தனர். அருகில் ஆளுயர பொம்மை ஒன்றும் எரிந்தநிலையில் கிடந்தது.
    தப்பி ஓடிய கேடல் ஜீன்சனை தேடிய போலீசார், திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தில் வைத்து கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.இணைய தளம் மூலம் சாத்தான்கள் பற்றி தான் ஆய்வு செய்ததில், ஒருவர் உயிர் பிரியும்போது மற்றொரு உடலுக்குள் செலுத்தி சாத்தானுக்கு பூஜைகள் செய்தால், அமானுஷ்ய சக்தி கிடைக்கும் என நம்பியதாக கேடன் ஜீன்சன் தெரிவித்துள்ளான். அதற்காகவே தாய், தந்தை, சகோதரி, அத்தை என நான்கு பேரையும் கோடாரியால் வெட்டிக் கொன்று உடல்களை எரித்ததாகவும், ஆன்லைன் மூலம் அந்தக் கோடாரியை வாங்கியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளான் கேடல் ஜீன்சன். ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் அழித்துவிட்ட பதற்றமோ, வேதனையோ இன்றி, போலீசாரின் கேள்விகளுக்கு சிரித்துக்கொண்டே பதிலளித்துள்ளான் அவன்.தன் குடும்பதையும் நீர்மூலமாக்கிவிட்டு, எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் எதுவும் நடக்காதது போல் பதில் அளித்த கேடல் ஜீன்சன் மன நோயாளியா என சோதனைக்காக திருவனந்தபுரம் மன நல மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் போலீசார். இணைய உதவியால் உலகையே விரல்நுனிக்கு கொண்டுவந்துள்ள காலத்தில் இன்னும் பில்லி, சூனியம், அமானுஷ்ய சக்தி என இணையத்தில் தேடியதன் விளைவே, பந்தபாசங்களைக் கடந்து கொடூரக் கொலைக்கு ஒரு இளைஞனை தூண்டி இருக்கிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad