Header Ads

  • BREAKING



    ஆக்கிரமிப்பு பஞ்சமி நிலங்களை ஒதுக்கீடுதாரர்களிடம் ஒப்படைக்க கோரிய மனு?


    தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சமி நிலங்களை முறையாக கணக்கெடுத்து, 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
    இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், தமிழகத்தில் ஆதிதிராவிடர்களுக்காக வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களை, வேறு சமுதாயத்தினரும், தனியார் நிறுவனத்தினரும் ஆக்கிரமித்து பல ஆண்டுகளாக அனுபவித்து வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக முறையாக கணக்கீடு செய்து, பஞ்சமி நிலங்களின் விபரங்களை தாக்கல் செய்யவும், அவற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஒதுக்கீடுதாரர்களிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சமி நிலங்களை முறையாக கணக்கீடு செய்து, அதுதொடர்பான அறிக்கையை 7 நாட்களுக்குள் தாக்கல் செய்ய, தமிழக தலைமை செயலர், தமிழக ஆதிதிராவிட நலத்துறை செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad