Header Ads

 • BREAKING  பல் மருத்துவத்துறையில் தொழில்நுட்ப படிப்பு!

  பன்னிரண்டாம் வகுப்பில் அறிவியல் முடிக்கும் மாணவர்கள் பயிலும் தொழிற்கல்வி வாய்ப்புகளில் அதிகம் அறியப்படாத ஒன்று, பல் மருத்துவத்துறையில் உள்ள டென்டல் டெக்னாலஜி  படிப்புகள்.

  இன்று நவீன பல் மருத்துவத்தில் தவிர்க்க முடியாதது டென்டல் செராமிக்ஸ் மற்றும் அது சார்ந்த பல் ஆய்வக தொழில்நுட்ப நிபுணர் கல்வி (The Dental Laboratory Technician Courses). டென்டல் செராமிக்ஸ் துறையில் முறையான பயிற்சி பெறாத, பழக்கத்தின் அடிப்படையில் செய்வோரே அதிகம் உள்ளனர்..
  பல் மருத்துவத்தில் இயற்கையான பல்லுக்கு மாற்றாக அமைவது டென்டல் செராமிக்ஸ் பற்கள் மட்டுமே. இதுகுறித்த தொழில்நுட்பப் படிப்புக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது.

  பல் மருத்துவத்தில் கணினி இயந்திரங்கள் மூலம் மிகக் கடினத்தன்மை கொண்ட செராமிக்ஸ் பற்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், இந்த இயந்திரங்கள் மிக அதிக விலை கொண்டவையாக உள்ளதால், அவை இதுவரை இந்தியாவுக்கு தருவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
  நாம் புதிதாக பல் பொருத்தச் சென்றால் இதில் உள்ள பல வகையான செராமிக் குறித்து மருத்துவரிடம் விரிவாகத் தெரிந்து கொண்டு சிகிச்சை பெறுவது நல்லது. குறிப்பாக PFM (Porcelain fused to metal) என்ற செயற்கை பல் இந்தியாவில் ரூ. 2000 என்ற மிகக் குறைந்த விலையில் அதிகம் பயன்படுத்தப்படுவதாகவும், ஆனால், இதில் கலந்துள்ள மெட்டல் உடல்நலனுக்கு ஏற்றதல்ல எனவும் கூறப்படுகிறது.
  இதுவே ஐரோப்பாவில் ரூ. 60,000. இதிலுள்ள தரமே விலை வேறுபாட்டுக்குக் காரணம். அங்கு செராமிக்ஸ் பல், தகுதிவாய்ந்த நிபுணத்துவம் மிக்க செராமிஸ்டுகளால் உருவாக்கப்படுகிறது. அவர்கள் மருத்துவமனைக்குச் சென்று நோயாளிகளின் பல் அமைப்பு, இயற்கையான வண்ணம் ஆகியவற்றை ஆராய்ந்து அவர்களின் விருப்பத்திற்கேற்ப தரமான செராமிக்ஸ் பற்களை செய்து தருகின்றனர்.

  டென்டல் டெக்னாலஜி என்பது கலையும், அறிவியலும் இணைந்த கல்வியாகும். பல் மருத்துவர்களுக்குத் தேவையான Crowns, bridges, partial dentures, pre and post oral and maxillofacial surgical devices, orthodontic appliances, mouthguard போன்றவற்றை வடிவமைத்துக் கொடுப்பது, சரிசெய்வது போன்றவையும், குறட்டை தடுப்பு கருவிகள், பேச்சு பயிற்சிக்கான கருவிகள் தயார் செய்வதும் டென்டல் டெக்னாலஜிஸ்டுகளின் பணியே. பெரும்பாலும் கருவிகள், உபகரணங்களைக் கொண்டு கலைத்திறனோடு பல் மருத்துவப் பொருள்களை உருவாக்குவதே இவர்களின் பணியாக இருக்கும். பல் மருத்துவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் இந்தப் பணிகள் அமைந்திருக்கும்.
  உரிய சான்றிதழ், பட்டயம் அல்லது பட்டம் பெற்று டென்டல் டெக்னாலஜிஸ்டுகளாகப் பணியாற்றலாம். சான்றிதழ் பெற 10-ஆம் வகுப்பும், பட்டயம் பெற பிளஸ் 2-வும் முடித்திருக்க வேண்டும். கல்வியின்போது Plaster casting, electro-spot welding, metal casting, metal polishing, wax modelling, ceramics, wire bending, electroplating, sandblasting ஆகியவற்றில் நுட்பமாக பணியாற்றும் திறன் பெற வேண்டும். ஆர்வம், திறன் அடிப்படையில் 3 அல்லது 4 ஆண்டுகளில் தனித்துவமிக்க டென்டல் டெக்னாலஜிஸ்டாக உருவாகிவிட முடியும்.
  Dental Laboratory Equipment Technician Course, Diploma in Dental Hygienist, Dental Material & Oral Hygiene, Dental Machanics, Dental Technicians, para medicalpara dental course என 2 அல்லது 3 ஆண்டுகள் கொண்ட 6 வகையான டிப்ளமா படிப்புகளும், 6 மாதம் முதல் ஓராண்டு வரை உள்ள 11 வகையான சான்றிதழ் படிப்புகளும் இதில் உள்ளன.
  ஆய்வகங்கள், பல் மருத்துவமனைகள், பல் மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவ உபகரணத் தயாரிப்பு நிறுவனங்களில் உடனடி வேலைவாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தொடக்க நிலையில் மாதம் ரூ. 10 ஆயிரமும், ஓரிரு ஆண்டுகள் அனுபவத்திற்குப் பிறகு குறைந்தபட்சம் மாதம் ரூ. 30 ஆயிரமும் ஊதியம் பெற முடியும். தொழில்திறன், மொழித்திறன் மிக்கோர் அயல்நாடுகளில் பலமடங்கு ஊதியம் பெறும் வாய்ப்பு உள்ளது.

  சென்னையில், அப்பல்லோ இன்ஸ்டிடியூட், ராகாஸ் பல் மருத்துவக் கல்லூரி, அரசு பல் மருத்துவக் கல்லூரி உள்ளிட்டவையும், சேலத்தில் விநாயகா மிசன் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரி என தமிழகத்தில் சுமார் 10 கல்லூரிகள் வரை டிப்ளமா இன் டென்டல் டெக்னாலஜி கோர்ûஸ நடத்துகின்றன. எனினும், ஒரு கல்லூரிக்கு 2 டென்டல் டெக்னாலஜி கோர்ஸூம், கோர்ஸூக்கு 30 பேரும், சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் கோர்ஸூக்கு 6 பேர் வீதம் 12 பேர் வரை மட்டுமே சேர்க்கப்படுவதாகத் தெரிகிறது.
  டென்டல் செராமிக்ஸ் டெக்னாலஜி கோர்ஸ் பயில ரூ. 60 ஆயிரம், டென்டல் அசிஸ்டென்ட்ஸ் கோர்ஸூக்கு ரூ. 20 ஆயிரம், Dental Hygienists கோர்ஸ் பயில ரூ. 45 ஆயிரம் குறைந்தபட்சம் செலவாகலாம்.

  கருத்துகள் இல்லை

  Post Bottom Ad